Teacher & Students jokes in Tamil:

jokes between teacher & students in Tamil

                 அனைவருக்கும் வணக்கம்!!! இந்த பதிவில் ஆசிரியருக்கும் மாணவருக்கும் இடையேயான உரையாடலின் காமெடிகளை பார்க்க உள்ளோம். இந்த உரையாடலை நீங்கள் உங்கள் ஆசிரியரிடமும் கூறலாம். ஆனால்  உங்கள் ஆசிரியர் காமெடியான நபராக இருந்தால் இதை பயன்படுத்துங்கள். மற்ற வகையில் பயன்படுத்தாமல் தவிர்ப்பது நல்லது. இந்த ஜோக்குகள் நீங்கள் மற்றவர்களுடன் பயன்படுத்தலாம். குறிப்பாக, ஒரு நபர் கோபத்தில் இருக்கும் போது நீங்கள் ஜோக்குகளை கூறுவதன் மூலம்  சிரிக்க வைக்கலாம்.

Jokes between Students & Teacher:

ஆசிரியர்: என்னடா இது! மணி 9:30 ஆகியும் இன்னும் ஒருத்தன் கூட காணோம். என்னடா இது! என்ன பண்ணுறது! இதோ கோபாலு வாரான். கோபாலே வாடா!! என்னடா கோபாலு வகுப்புல யாரையும் காணோம்.

கோபால்: சார், நீங்க வந்து இருக்கிங்க தான அதுதான் யாரையும் காணோம்.

ஆசிரியர்: சரி விடுடா விடுடா அது எல்லாம் பாக்கலாமா. சரி வா Class உள்ள போலாம். உனக்காவது Class படம் நடந்துடுமா...

கோபால்: சார், Classக்குள்ள தான இருக்கோம் அப்புறம் ஏன் Class உள்ள போலாமான்னு கேக்குறீங்க.

ஆசிரியர்: கொஞ்ச நேரத்துல நம்மள கிருகன் ஆகிடுவான் போல..

கோபால்: சார் நீங்க Mind voiceனு கத்தி பேசிட்டு இருக்கீங்க. 

ஆசிரியர்: சரி அது எல்லாம் விட்டு பாடத்துக்குள்ள போலாம். தமிழ் பாடம் நடத்துறேன் உனக்கு. திருவள்ளுவர் திருக்குறளை பாடி உள்ளார்.

கோபால்: சார் சார் அது எல்லாம் Ok. என்க விட்டு பக்கத்துல குமாரு, கானா அவங்க எல்லாம் நிறைய பாடி இருங்க அது எல்லாம் ஏன் புத்தகத்துல வரல..

ஆசிரியர்: டேய் டேய் நிறுத்து உனக்கு ஆங்கிலம் பாடம் சொல்லி தரேன். இப்பதிக்கு English பாடம்  Ok வா. Tinkle Tinkle little Star..

கோபால்: சார் நில்லுங்க நில்லுங்க Tinkle Tinkle Little Star... இல்லை Uncle uncle மாமா அதுகூட உங்களுக்கு தெரியல So sir.

ஆசிரியர்
: சரி விடுடா.. நம்ம Science படத்துக்கு போகலாம். பூமி உலகத்தை சுற்றி வருகிறது. எப்படி சுற்றி வருது சொல்லுங்க பார்ப்போம்.

கோபால்: சார் நில்லுங்க சார். என்க அப்பா என்ன தெரியுமா சொல்லி இருக்காரு கட்டிங்க் போட்டாலே போதுமாம். இந்த உலகத்தை சுற்றி வரலாமா. ஒரு கட்டிங்க் போடுங்க சார் உலகத்தை சுற்றி வரலாம். நீங்க வேனா 
போடுறிங்களா.

ஆசிரியர்: சரி விட்டுட.. உனக்கு கணக்கு புடிக்கும்லா!! கணக்கு சொல்லித்தரேன் டா. ஒன்னும் ஒன்னும் இரண்டு. என்க நீ சொல்லு பாப்போம்.

கோபால்
: சார் சார் ஏன் சார் திரும்ப திரும்ப திரும்ப திரும்ப தப்பு பண்ணுறீங்க. ஒன்னு ஒன்னு பக்கத்துல கை வெச்சி பாருங்கள் பதின் ஒன்னு சார். ஏன் சார் என்ன இப்படி கழுத்தை அறுக்கிறீங்க.

ஆசிரியர்: எப்ப என்ன விடுடா சாமி. உனக்கு சொல்லிகொடுத்ததுக்கு நான் வாத்தியார் வேலையை விட்டே போறேன்.