Mokka jokes | மொக்க ஜோக்ஸ்:
அனைவருக்கும் வணக்கம்!!! இந்த பதிவில் இந்த பதிவில் தமிழில் மிகவும் மொக்கையான ஜோக்ஸ்(Over Mokka jokes) பார்க்க உள்ளோம். இந்த பதிவில் நீங்கள் மொக்கை ஜோக்ஸ்(Mokka Jokes) நீங்கள் பார்த்து சிரியுங்கள் அல்லது இந்த மொக்க ஜோக்ஸ்(Mokka jokes) மற்றவர்களிடம் கூறி அவர்களை சிரிக்க வையுங்கள். மனிதர்கள் சோகத்தில் வேதனையில் உள்ளபோது கேட்பது ஜோக்ஸ்(Jokes) தான். அப்படிப்பட்ட ஜோக்ஸ்(Jokes) இல் ஒரு வகையான மொக்க ஜோக்ஸ் நாம் இந்த பதிவில் பார்க்க உள்ளோம். நீங்கள் ஒருவர் சோகத்தில் உள்ளபோது அல்லது கோபத்தில் உள்ளபோது கூறி அவர்களை மகிழ்விக்கலாம்.
Over Mokka jokes in Tamil:
- நம்ம தமிழ்நாட்டுல எந்த அத்துக்குள்ள மீன் பிடிக்க முடியாது? சொல்லுங்க பார்ப்போம்
ஐயர் ஆத்துல தான். - இந்த உலகத்திலே பல் டாக்டர்க்கு தான் அதிகம் சொத்து இருக்கும் ஏன்?
என்னா அவர்தானே அதிக சொத்தை புடுங்குறாரு.(பல் சொத்தை) - உங்க பேனாவை வெச்சி எல்லா எழுத்தையும் எழுதலாம் ஆனா ஒரு எழுத்தை எழுத முடியாது? அது என்ன எழுத்து சொல்லுங்க பார்ப்போம்.
வேற என்ன தலை எழுத்து தான். - சென்னை கடற்கரையிலே வீடு காட்டுன என்ன ஆகும் சொல்லுங்க பார்ப்போம்....
ஒன்னு ஆகாது காசுதான் செலவு ஆகும். - ஒருத்தன் எப்ப பார்த்தாலும் கதவை மூடிட்டு தான் மருந்து குடிக்கிறாரு ஏன்?
என்னா டாக்டர் தான் அறை மூடி மாத்திரை குடிக்க சொன்னாராம். - ஆமாம் தயிர் ஏன் Whiteஆ இருக்கு?
என்னா அது தோய்ய (க்க)ரதால - கடிகாரம் வாங்க ஒருத்தன் கடைக்கு போன அப்போ அந்த கடைக்காரரு கிட்ட எந்த கடிகாரம் சரியா Time காட்டும்னு கேட்டானாம். அதுக்கு அந்த கடைக்காரரு என்ன சொல்லி இருப்பாரு தெரியுமா?
தம்பி! எந்த கடிகாரமும் நேரத்தை காட்டாது நம்மதான் பார்த்துக்கணும். - எதோ பண்டிகைன்னா ஏன் வாழைமரம் கட்டுறாங்கனு தெரியுமா?
என்னா வழமரம் காட்டுலனால் அது கீழே விழுந்துடும்ல அதுதான் காட்டுறாங்க. - Water இல்லாத Ocean எங்கே இருக்கும்? சொல்லுங்க பார்ப்போம்.
வேற எங்க! Mapல தான். - ஆமாம் நாம எல்லாம் எதுக்கு Watch காட்டுறோம்னு தெரியுமா?
Time பார்க்க தான்.
"நம்ம எந்த இடத்தில் இருக்கின்றோம் என்பது முக்கியம் இல்லை. எவ்வாறு செயல்படுகின்றோம் என்பதே முக்கியம்."
1 Comments
Super
ReplyDelete