Kadi kamadigal | கடி காமெடிகள்:
அனைவருக்கும் வணக்கம்!!! இந்த பதிவில் தமிழில் கடி காமெடிகள் ( Kadi Jokes ) பார்க்க உள்ளோம். பொதுவாக மக்கள் சோகத்தில் உள்ளபோது கேட்பது பார்ப்பது என்றால் அது காமெடிகள்( Jokes ) தான். அதில் எந்த விதமான ஐயமும் இல்லை. அப்படிபட ஜோக்கில் ஒரு வகையான மொக்க ஜோக்கை ( Mokka Jokes ) இந்த பதிவில் பார்க்க உள்ளோம். இந்த மொக்க ஜோக்கை ( Mokka Jokes ) நீங்கள் ஒருவர் சோகத்தில் உள்ளபோது அல்லது கோபத்தில் உள்ளபோது கூறி அவர்களை மகிழ்விக்கலாம்.
Tamil kadi kamadigal | தமிழ் கடி காமெடிகள்:
- பில்டர் காப்பியை ஏன் கல்யாண பண்ணிக்க முடியாது?
ஏன்னா அது மணமான(கல்யாண) காப்பி. - சாப்பிட முடியாத கனி, அது அந்த கனி?
சாப்பிட முடியாத கனி பால்கனி. - மா மர இலை 52, அரச மர இலை 66 ஆல மர இலை 92, இத எல்லாத்தையும் சுட்டினால் என்ன வரும்?
வேறென்ன வரும் குப்பைத்தான் வரும். - குத்தும் காய் அது என்ன காய்?
முள்ளங்கி(முள் + அங்கி ) - சுகந்திர தினத்திற்கும் குடியரசு தினத்திற்கும் என்ன வித்தியாசம்?
வேறென்ன 5 மாதம் வித்தியாசம். - ஒரு கல்யாணத்தில எல்லாருக்கும் பிரெட் கொடுத்துக்களாம் ஏன்?
ஏன்னா!!! கல்யாணம் ஜாம் ஜாம்னு நடந்துச்சாம். - ரொம்ப நாள் உயிர் வாழ என்ன பண்ணனும்?
வேற ஏன்னா சாகாம இருக்கனும். - மாடு ஏன் பால் தருகிறது?
ஏன்னா!!! அதால டீ, காபி தரமுடியாது. - பல் வலிக்கு முக்கியமான காரணம் என்னனு தெரியுமா?
வேற ஏன்னா!!! பல் தாங்க!!! - இட்லிக்கு பொங்கலுக்கும் என்ன வித்தியாசம்?
பொங்கலுக்கு லீவு விடுவாங்க, ஆனா இட்லிக்கு லீவு விடமாட்டாங்க.
0 Comments